கார்த்திகை பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: திருச்சானூர் கோவிலில் பல்லக்கு சேவை


கார்த்திகை பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: திருச்சானூர் கோவிலில் பல்லக்கு சேவை
x
தினத்தந்தி 4 Dec 2021 5:51 PM GMT (Updated: 4 Dec 2021 5:51 PM GMT)

திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான காலை பல்லக்கு சேவை, இரவு தங்க யானை வாகன சேவை நடந்தது.

திருமலை,

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை பல்லக்கு சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் பெரிய, சின்ன ஜீயர்சுவாமிகள், இணை அதிகாரி வீரபிரம்மய்யா, துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, கோவில் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்க யானை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார், ‘மகாலட்சுமி’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு மும்பையைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்ற பக்தர் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கினார். அந்தத் தங்க நகைகள் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story