இப்போது தான் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட தலைமை செயலாளர்
மராட்டிய அரசின் தலைமை செயலாளரான தேபாஷிஸ் சக்ரவர்த்தி தற்போது தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது.
மும்பை,
மராட்டிய தலைமை செயலாளராக இருந்த சீத்தாராம் குந்தே கடந்த 30-ந் தேதியுடன் ஓய்வு பெற்றார். எனவே தலைமை செயலாளர் பொறுப்பை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த தேபாஷிஸ் சக்ரவர்த்தி கவனித்து வருகிறார். இந்தநிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை தான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டது தெரியவந்து உள்ளது. அவர் தனது முதல் டோசை பைகுல்லாவில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திாியில் போட்டதை அங்கு பணிபுரியும் மூத்த டாக்டர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. பொது மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், டாக்டர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்தநிலையில் மூத்த அதிகாரி ஒருவரே 10 மாதங்களாக தடுப்பூசி போடாமல் இருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் 10 மாதங்களாக தடுப்பூசி போடாது குறித்து தலைமை செயலாளர் தேபாஷிஸ் சக்ரவர்த்தியிடம் கேட்ட போது, தடுப்பூசி போடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றார். இந்த மாத இறுதியில் மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story