மங்கோலியாவில் இருந்து புத்தகயா வந்தவருக்கு கொரோனா
மங்கோலியாவில் இருந்து 23 பேரை கொண்ட குழு ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தது.
புத்தகயா,
பீகார் மாநிலத்தில் உள்ள புத்த மதத்தினரின் புனித தலமான புத்த கயாவில் வழிபாடு நடத்துவதற்காக மங்கோலியாவில் இருந்து 23 பேரை கொண்ட குழு ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தது. அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்பட்டது. இந்த நிலையில் இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில் 23 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து, அவர் புத்த கயாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு அவர் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறியவும் டாக்டர்கள் முயன்று வருகின்றனர்.
Related Tags :
Next Story