புதுச்சேரியில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை


புதுச்சேரியில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 5 Dec 2021 5:40 AM IST (Updated: 5 Dec 2021 5:40 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் படி கட்டாய தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பொது இடங் களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட் டுள்ளது.

Next Story