எல்லை பாதுகாப்பு படையினருக்கு நவீன தொழில்நுட்பங்கள்; உள்துறை அமைச்சர் அமித்ஷா
எல்லை பாதுகாப்பு படையினருக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
புதுடெல்லி,
எல்லை பாதுகாப்பு படை தோற்றுவிக்கப்பட்டதன் 57-ம் ஆண்டு விழா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். பின்ன்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறியதாவது;
எல்லை பாதுகாப்பு படையினருக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் கிடைக்க செய்வதை மத்திய அரசு உறுதி செய்யும். டிரோன்கள் மூலம் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் வந்து கொண்டுள்ளன. டிரோன்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தை பிஎஸ்எப், டிஆர்டிஓ மற்றும் என்எஸ்ஜி இணைந்து தயாரித்து வருகின்றன.
உள்நாட்டு தொழில்நுட்ப வசதியுடன் விரைவில் அதனை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மோடி, பிரதமராக பதவியேற்ற பிறகு , நமது எல்லைக்குள் ஊடுருபவர்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படுகிறது.
நமது எல்லைகளையும், வீரர்களையும் யாரும் சாதாரணமாக எடுத்து கொள்ள அனுமதிக்க முடியாது என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story