ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு; 9 பேரில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள்


ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு; 9 பேரில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள்
x
தினத்தந்தி 5 Dec 2021 10:09 PM IST (Updated: 5 Dec 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெய்ப்பூர்,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இன்று 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜராத், டெல்லி மற்றும் மராட்டியத்தில் தலா ஒருவருக்கு என மொத்தம் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால், மராட்டியத்தில் மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 9 பேரில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் என்பதும் மீதமுள்ள 5 பேர் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story