கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1,707 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பட்டியலை கேரள கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில், மத அடிப்படையிலான காரணங்களால், ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.
அவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என்றும், அவர்கள் வாரந்தோறும் தங்கள் செலவிலேயே கொரோனா பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் கேரள அரசு கூறியுள்ளது.
இந்தநிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1,707 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பட்டியலை கேரள கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் தடுப்பூசி போடாததை நியாயப்படுத்த முடியாது என்று கல்வி மந்திரி சிவன் குட்டி தெரிவித்தார்.
Related Tags :
Next Story