கர்நாடக பள்ளியில் 90 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளியில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சிக்கமகளூர்,
கர்நாடகாவின் சிக்கமகளூரில் அமைந்துள்ள பள்ளி கூடமொன்றில் 69 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 59 பேர் மாணவர்கள் மற்றும் 10 பேர் பணியாளர்கள் ஆவர். அந்த மாணவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. 457 கொரோனா மாதிரிகளில் 69 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
இதனை தொடர்ந்து, சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு எதிரொலியாக, மத்திய அரசால் நடத்தப்படும் அந்த பள்ளிக்கு சிக்கமகளூர் கலெக்டர் உத்தரவின்படி, அடுத்த 7 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், அந்த பள்ளியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 90 பேர் மாணவர்கள். 11 பேர் பணியாளர்கள் ஆவர். கொரோனா மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story