வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் - மகன் மரணம்; எரித்து கொல்லப்பட்டனரா?
கேரளாவில் வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் - மகன் மரணமடைந்துள்ளனர். இருவரும் எரித்து கொல்லப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோச்சி மாவட்டம் வைபென் நகரம் நாயரம்பலம் பகுதியை சேர்ந்தவர் சிந்து (42). இவரது மகன் அதுல் (17). சிந்துவின் கணவர் சஜு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். தற்போது சிந்து தனது மகன் அதுலுடன் வீட்டில் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிந்து வீட்டில் இருந்து புகை வெளியேறியது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தின் சிந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சிந்து மற்றும் அவரது மகன் அதுல் உடல் முழுவதும் தி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிந்து இந்த நிலைக்கு யார் காரணம் என உறவினர்கள் கேட்டபோது ஒரு இளைஞனின் பெயரை உச்சரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்து ஞாயிற்றுக்கிழமையும், அவரது மகன் அதுல் இன்றும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சிந்து தனது கடைசி மூச்சு உள்ளபோது கூறிய அந்த இளைஞன் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும், அந்த இளைஞன் யார் என்பது தெரிந்ததையடுத்து அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். .
தற்போது, விசாரணையில் உள்ள இளைஞன், தனக்கு தொல்லைகொடுப்பதாக உயிரிழந்த சிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிந்து போலீசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். ஆனால், அப்போது அந்த இளைஞன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், தற்போது சிந்து மற்றும் அவரது மகன் அதுல் வீட்டில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்துள்ளதால் அந்த இளைஞனே சிந்து மற்றும் அதுலை எரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை வளையத்தில் உள்ள அந்த இளைஞனின் பெயர் உள்ளிட்ட எந்த விவாரத்தையும் போலீசார் வெளியிடவில்லை.
Related Tags :
Next Story