ஆந்திர பிரதேசத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது


ஆந்திர பிரதேசத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 9:43 PM IST (Updated: 6 Dec 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.


விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மம்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 3 பெண் மாவோயிஸ்டுகளை கைது செய்துள்ளனர்.

அவர்கள் பல தாக்குதல்களை நடத்தியவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  2 கிலோ எடை கொண்ட நில கண்ணிவெடிகள் நிரப்பப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் 6 டெட்டனேட்டர்கள் உள்பட பல வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story