18 வயதுக்கு மேற்பட்டோரில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டது முக்கியமான மைல்கல் மோடி மகிழ்ச்சி
முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று கூறியிருந்தார்.
அவரது அறிவிப்பை பிரதமர்மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘இந்தியாவின் தடுப்பூசி பணி மற்றொரு முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்த இந்த உத்வேகத்தை தொடர்ந்து கடைபிடிப்பது மிகவும் முக்கியம். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்’’ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story