திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை - யாரும் நம்ப வேண்டாம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை


திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை - யாரும் நம்ப வேண்டாம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2021 2:10 AM IST (Updated: 7 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம்.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாகவும், எவ்வளவு வேலை காலியாக உள்ளது என்றும் வேலைக்கு ஏற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இது, போலியானது, என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம். கடந்த காலங்களில், தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக சிலர் மோசடி செய்து, சில அப்பாவிகளிடம் இருந்து பணம் வசூலித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு தொடர்பாக தேவஸ்தான இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். கடந்த காலங்களில் இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளோம். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலை வாங்கி தருவதாக வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story