கோரக்பூரில் ரூ.9,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்


கோரக்பூரில் ரூ.9,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 7 Dec 2021 7:17 AM IST (Updated: 7 Dec 2021 7:17 AM IST)
t-max-icont-min-icon

கோரக்பூரில் ரூ.9,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
 
சட்டசபை தேர்தலுக்காக பிரமாண்ட யாத்திரைகளை நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிக இடங்களைக் கைப்பற்றுவது எப்படி என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் ரூ.9,600 கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சித்திட்ட பணிகளையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Next Story