போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை -இழப்பீடு வழங்க வேண்டும்- ராகுல்காந்தி


போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை -இழப்பீடு வழங்க வேண்டும்- ராகுல்காந்தி
x
தினத்தந்தி 7 Dec 2021 1:50 PM IST (Updated: 7 Dec 2021 1:50 PM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி கோரிக்கை வைத்து பேசினார்.

புதுடெல்லி,

மக்களவையில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தது தேசத்திற்கு தெரியும். இந்த விவகாரத்தில் பிரதமர் மன்னிப்பு கோரினார், தனது தவறை ஒப்புக்கொண்டார். அப்படியானால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  ஆனால், கடந்த 30-ம் தேதி வேளாண் துறை அமைச்சகத்திடம், போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்று கேட்கப்பட்டதற்கு தங்களிடம் பதில் இல்லை என்று அரசுத்தரப்பு கூறியுள்ளது. 

பஞ்சாப் அரசு உயிரிழந்த சுமார் 400 விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. அவர்களில் 152 பேருக்கு வேலையும் வழங்கியது. என்னிடம் அதற்கான பட்டியல் உள்ளது. அரியானாவைச் சேர்ந்த 70 விவசாயிகளின் மற்றொரு பட்டியலையும் நாங்கள் தயாரித்துள்ளோம். விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story