வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
ஒமைக்ரான் அச்சுறுத்தலையொட்டி வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை செய்த பின்னரே விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை ஆய்வு கூடங்கள் 24 மணி நேரமும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு நடத்திய சோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோ தொழில்நுட்ப ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்போது 8 பேரின் முடிவுகள் வந்துள்ள நிலையில், அனைவருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் 2 பேரின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story