ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 10:46 AM IST (Updated: 8 Dec 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவு தொடர்பான மாதந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

கூட்டம் நிறைவடைந்த பின்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4% ஆக நீடிக்கிறது எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது என்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஆர்பிஐ.யின் நிதி கொள்கை முடிவு தொடர்பான மாதந்திர கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Next Story