பிபின் ராவத் உடலுக்கு நாளை மறுநாள் இறுதிச்சடங்கு
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவியின் உடலுக்கு டிசம்பர் 10ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு டிசம்பர் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளது.
டிசம்பர் காலை 11 மணி முதல் 2 மணி வரை பிபின் ராவத்தின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story