தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியது + "||" + India reports 9,419 new COVID19 cases, 8,251 recoveries, and 159 deaths in the last 24 hours

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 8 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்தது. இந்த நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8 ஆயிரத்து 251 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 388 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 94 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 159 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 80,86,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,39,32,286 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு ஐ.நா. சபை ஆதரவு
உலகிலேயே மிகப்பெரிய இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
2. பிரான்சில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா பாதிப்பு...!!
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,28,008 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இத்தாலியில் புதிதாக 1,67,206 பேருக்கு கொரோனா: மேலும் 362 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,67,206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 74,692 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் - சுகாதார துறை மந்திரி
கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.