சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து


சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Dec 2021 5:40 AM GMT (Updated: 2021-12-09T11:10:31+05:30)

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதை தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்,  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், " திருமதி சோனியா காந்திக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன் " என்று குறிப்பிட்டிருந்தார்.


Next Story