பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்பு ; சந்தேகம் கிளப்பும் மூத்த பா.ஜ.க தலைவர்


பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்பு ; சந்தேகம் கிளப்பும்  மூத்த பா.ஜ.க தலைவர்
x
தினத்தந்தி 9 Dec 2021 3:48 PM IST (Updated: 9 Dec 2021 3:48 PM IST)
t-max-icont-min-icon

பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்பு சந்தேகம் உள்ளது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.


புதுடெல்லி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் உள்ளது என கூறி உள்ளார்.

பிபின் ராவத் -அவரது மனைவி உள்பட பல மூத்த ராணுவ அதிகாரிகள் எப்படி இறந்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையில்  விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

Next Story