அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை நிறைவு செய்த புனே..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Dec 2021 2:29 AM IST (Updated: 10 Dec 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

புனே மாவட்டத்தில் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே, 

ஒமைக்ரான் வைரஸ் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களை காட்டிலும் மராட்டியத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டியத்தில் உள்ள புனே மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. புனேயில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 83 லட்சத்து 42 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் முதல் டோஸ் போட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புனேயில் இதுவரை 65.7 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மராட்டியத்தில் தலைநகர் மும்பையில் ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 100 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story