குஜராத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் புது முயற்சி...


குஜராத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் புது முயற்சி...
x
தினத்தந்தி 10 Dec 2021 4:28 AM IST (Updated: 10 Dec 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி போட்டனர்.


ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிவதில் புதிய முறையை கையாளுகின்றனர்.  அங்கே நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு நேராக சென்று கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனியாக கண்டறிந்து அவர்களுக்கு திருமண மண்டபத்திலேயே வைத்து கொரோனா தடுப்பூசி போடுகின்றனர்.  இதுபற்றி சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, 2வது டோசை செலுத்தி முடிப்பதற்காக சான்றிதழ்களை நாங்கள் சரிபார்க்கிறோம்.  தடுப்பூசியும் இங்கேயே செலுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story