சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிப்பு
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி யில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தடை மாதந்தோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு குறைந்ததால், டிசம்பர் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒமைக்ரான் தொற்று பல நாடுகளிலும் பரவத்தொடங்கியதால், 15-ந் தேதி சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் முடிவு கைவிடப்பட்டது.
இந்தநிலையில், இந்த போக்குவரத்துக்கான தடை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதேநேரம் விமான கட்டுப்பாட்டகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில விமான சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story