டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மோசம்


டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மோசம்
x
தினத்தந்தி 10 Dec 2021 9:31 AM IST (Updated: 10 Dec 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காற்று தரக் குறியீடு '293' என்ற அளவில் மோசமாக உள்ளது.

புதுடெல்லி,

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியம் இல்லாத சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும், கட்டுமானப் பணிகள், கட்டிடங்களை இடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  டெல்லியில் காற்று தரக் குறியீடு '293' என்ற அளவில் மோசமாக உள்ளதாக காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் தொடரும் காற்று மாசின் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

Next Story