இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு மிதமான அறிகுறிகளே உள்ளன: சுகாதாரத் துறை


இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு  மிதமான அறிகுறிகளே உள்ளன: சுகாதாரத் துறை
x
தினத்தந்தி 10 Dec 2021 8:36 PM IST (Updated: 10 Dec 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

எனினும் அனைவருக்குமே மிதமான அறிகுறிகளே இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொருளாதார நிலையிலும் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அதன் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.

இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அனைவருக்குமே மிதமான அறிகுறிகளே இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Next Story