இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசிகள் 131.18 கோடி


இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசிகள் 131.18 கோடி
x
தினத்தந்தி 11 Dec 2021 12:26 AM IST (Updated: 11 Dec 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மொத்தம் 131.18 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.




புதுடெல்லி,

நாட்டில் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  மத்திய அரசு (இலவச அடிப்படையில்) மற்றும் நேரடி மாநில கொள்முதல் பிரிவு வழியாக இதுவரை 
140 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இதன்படி, 1,40,01,00,230 டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 19 கோடிகளுக்கும் கூடுதலான (19,08,75,946) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (வெள்ளி கிழமை) இரவு 7 மணிவரையில் 68 லட்சம் (68,63,955) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  அவர்களில் 17,83,856 பேருக்கு முதல் டோசும் மற்றும் 50,80,099 பேருக்கு 2வது டோசும் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதுவரையில் மொத்தம் 131,90,73,072 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story