பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம்
பீரங்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் தகனம் செய்யப்பட்டன. தாய், தந்தை உடலுக்கு அவர்களது மகள்கள் தீ மூட்டினர்.
புதுடெல்லி,
இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத் (வயது 63).
ஹெலிகாப்டர் விபத்து
இவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இளம் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக கடந்த 8-ந் தேதி தனது மனைவி மதுலிகா வுடன் கோவை வந்தார்.
டெல்லியில் இருந்து சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்த அவர்கள், பின்னர் அங்கிருந்து எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என மேலும் 12 பேர் இருந்தனர்.
விமானப்படைக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா, நஞ்சப்ப சத்திரம் அருகே சென்றபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அத்துடன் அங்கேயே தீப்பிடித்தது.
டெல்லி கொண்டு செல்லப்பட்டன
நெஞ்சை பதற வைக்கும் இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
கேப்டன் வருண் சிங் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு உள்ள அவருக்கு, அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சூலூர் விமானப்படை தளத்துக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து விமானப்படை விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
பிரதமர் மோடி அஞ்சலி
பாலம் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் மற்றும் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
இதைப்போல ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தெடர்ந்து பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் டெல்லி காமராஜ் மார்க்கில் உள்ள அவர்களது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
அமித்ஷா மரியாதை
அங்கு நேற்று காலை முதல் அஞ்சலிக்காக உடல்கள் வைக்கப்பட்டன.
அங்கு உள்துறை மந்திரி அமித்ஷா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பா.ஜனதா தலைவர் நட்டா, மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால், புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் நாட்டின் முதல் முப்படை தளபதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஹரிஷ் சிங் ராவத், தி.மு.க.வின் கனிமொழி, ஆ.ராசா உள்பட பல தலைவர்களும் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பாதுகாப்பு படை, உளவுத்துறை, முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் நாட்டின் பாதுகாப்புத்துறையின் உயர் தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு நாடுகளின் சார்பிலும் அந்தந்த நாட்டு தூதர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தவிர ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று முப்படைகளின் தலைமை தளபதிக்கும், அவரது மனைவிக்கும் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் தொடங்கியது
இதைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத்தின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 2.20 மணியளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ராவத்தின் உடல் ஏற்றப்பட்டு டெல்லி கன்டோன்மெண்டுக்கு உட்பட்ட பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் முப்படைகளையும் சேர்ந்த 99 வீரர்கள், பிபின் ராவத் உடல் வைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்தியை சூழ்ந்தவாறே சென்றனர். மேலும் முப்படைகளிலும் இருந்து 33 இசைக்கலைஞர்களும் வாத்தியங்களை மீட்டியவாறே உடன் சென்றனர்.
வாழ்த்து கோஷமிட்ட மக்கள்
தேசத்தின் தலைசிறந்த பாதுகாப்பு வீரனின் இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும் ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும், சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் தேசிய கொடிகளை ஏந்தியவாறு மலர்களை தூவி தேசத்தின் மகத்தான போர் வீரனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
மேலும் அவரது புகழையும், ராணுவத்தின் மகத்துவத்தையும் வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். ‘பாரத் மாதாகீ ஜே’ என்ற கோஷங்களும் விண்ணதிரச்செய்தன.
ராஜ்நாத் சிங் அஞ்சலி
இந்த ஊர்வலம் பிரார் சதுக்கத்தை அடைந்ததும் ராவத் தம்பதி உடல்கள் வாகனங்களில் இருந்து இறக்கி அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டன. பின்னர் முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணி ஆகியோர் தங்கள் அன்புக்குரிய பெற்றோருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். அத்துடன் உறவினர்களும் ராவத் தம்பதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பீரங்கி குண்டுகள்
இதைத்தொடர்ந்து இருவரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் தகன மேடைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கு ராவத்தின் பெட்டி மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இருவரின் உடல்களும் ஒரே மேடையில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பிபின் ராவத் தம்பதியின் மகள்கள் இந்த சடங்குகளை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத், மதுலிகா ராவத் சிதைக்கு மகள்கள் தீ மூட்டினர்.
800 வீரர்கள்
அப்போது மயானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாரத் மாதா கீ ஜே என்று வீர வணக்கம் செலுத்தினர். அத்துடன் நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதிக்கு பிரியாவிடையும் அளித்தனர்.
பிபின் ராவத் தம்பதியின் இறுதிச்சடங்கில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, பிரான்ஸ் நாட்டு தூதர் இம்மானுவேல் லினைன், இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் உள்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முப்படைகளிலும் இருந்து சுமார் 800 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதனால் பிரார் சதுக்கத்தில் எங்கு நோக்கினும் சீருடை அணிந்த வீரர்களின் முகங்களே தெரிந்தன.

Related Tags :
Next Story