சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு


சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 9:16 AM IST (Updated: 11 Dec 2021 9:16 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும், பம்பை நதியில் இன்று முதல் பக்தர்களுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவசம் போர்டு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, 

பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள்.

 பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யும் அனுமதி அளிக்கப்படுகிறது.  ஆனாலும் பம்பை ஆற்றின் நீர் வரத்திற்கு ஏற்ப பக்தர்கள் குளிப்பது, பலி தர்ப்பணம் செய்வது குறித்த விஷயத்தில பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சன்னிதானத்தில் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்காக சன்னிதானத்தில் 500 அறைகள் கோவிட் 19 நோய்த்தடுப்பு விதிமுறைகளின்படி தயார்படுத்தப்பட்டுள்ளது.

Next Story