‘எதிர்காலத்தில் விமானப்படையில் இணைய விரும்புகிறேன்’ - குன்னூர் விபத்தில் உயிரிழந்த வீரரின் மகள் உருக்கம்


‘எதிர்காலத்தில் விமானப்படையில் இணைய விரும்புகிறேன்’ - குன்னூர் விபத்தில் உயிரிழந்த வீரரின் மகள் உருக்கம்
x
தினத்தந்தி 12 Dec 2021 3:55 AM IST (Updated: 12 Dec 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை போல எதிர்காலத்தில் விமானப்படையில் இணைய விரும்புவதாக குன்னூர் விபத்தில் உயிரிழந்த வீரரின் மகள் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆக்ரா, 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களில், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகானும் ஒருவர். உத்தரபிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்த இவரது உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.சவுகானின் சிதைக்கு அவரது 12 வயது மகள் ஆரத்யா மற்றும் மகன் அவிராஜ் (வயது 7) ஆகியோர் தீ மூட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரத்யா, எதிர்காலத்தில் தனது தந்தையை போல விமானப்படையில் இணைய விரும்புவதாகவும், ஏனெனில் அவர்தான் தனக்கு ஹீரோ என்றும் தெரிவித்தார்.

படிப்பில் கவனம் செலுத்துமாறு தனது தந்தை எப்போதும் அறிவுரை கூறுவார் எனக்கூறிய ஆரத்யா, அவ்வாறு செய்தால் மதிப்பெண்கள் தானாகவே வந்து சேரும் எனவும் அவர் நம்பிக்ைகயூட்டுவார் என்றும் கூறினார்.

Next Story