நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகனாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால், சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,
‘‘ரஜினிகாந்த் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களை ஊக்கப்படுத்தினார். ரஜினி நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும் ’’ என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story