கருவிகள் பொருத்திய புறா: பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க அனுப்பட்டதா? குஜராத் போலீஸ் விசாரணை!
கருவிகள் பொருத்திய புறாவை பிடித்த போலீசார் பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க அனுப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
போர்பந்தர்,
குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கருவிகள் பொருத்திய இரண்டு புறாக்களைக் கண்ட படகோட்டி ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த இரண்டு புறாக்களையும் பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்து அதன் அலகுகளில் பொருத்தப்பட்ட கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க இந்தப் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைப்பற்றிய கருவியை சோதிக்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க புறக்காள் அனுப்பட்டதா என போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story