இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 36 ஆக உயர்வு


இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 36 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Dec 2021 1:22 PM IST (Updated: 12 Dec 2021 2:03 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 36 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில்,  இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு ஒமைக்கரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மராட்டியம் - 17, ராஜஸ்தான் - 9, டெல்லி - 2, குஜராத் - 3, ஆந்திரா -1, கர்நாடகா - 3  சண்டிகர் - 1 என  இந்தியாவில் ஓமைக்கரனால் பாதிக்கட்டர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவை. இதன் மூலம் ஓமைக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பு குறையும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story