கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு...!


கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு...!
x
தினத்தந்தி 12 Dec 2021 1:55 PM IST (Updated: 12 Dec 2021 1:55 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுள்ளது.

பெங்களூரு,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகம் திரும்பிய 34 வயதான ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் ஓமைக்கரனால் பாதிக்கட்டோர் எண்ணிக்கை 2-லிருந்து 3-ஆக உயர்ந்துள்ளது.

இதனால் இந்தியாவில் இந்தியாவில் ஓமைக்கரனால் பாதிக்கட்டோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

Next Story