சிபிஎஸ்இ கேள்வி - மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சோனியா காந்தி


சிபிஎஸ்இ கேள்வி - மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சோனியா காந்தி
x
தினத்தந்தி 13 Dec 2021 7:48 AM GMT (Updated: 13 Dec 2021 7:48 AM GMT)

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 11-ம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது.

அதில், ஒரு கேள்வியில் கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து மக்களவையில் சோனியா காந்தி பேசியதாவது:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்  கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றதால் சர்ச்சைக்குள்ளாக்கியது. 

Next Story