காசி இப்போது மீண்டும் புதிய ஒளி பெற்றுள்ளது - பிரதமர் மோடி
வாரணாசி, காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் ரூ339 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வாரணாசி,
இரண்டு நாள் பயணமாக சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். அவரை அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருக்கும் கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டடுக்கு படகில் பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து தற்போது, உலகப்புகழ்பெற்ற காசி விஸ்வநாதன் ஆலயத்திற்கு வருகை தந்த மோடி, புன்னிய நதியான காசி நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து காசி விஸ்வாநாதர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினார். இதனையடுத்து காசி விஸ்வநாதர் ஆலய வளாக கட்டிட பணியில் ஈடுபட்ட பணியாளளுக்கு பிரதமர் மோடி பூ தூவி மரியாதை செலுத்தினார். காசி விஸ்வநாதர் ஆலய வளாக கட்டிட பணியில் ஈடுபட்ட பணியாளகளுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை முடித்துக்கொண்டு காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று, இந்த மாபெரும் வளாகத்தை கட்டுவதற்கு உழைத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்19 காலத்திலும், பணிகள் பாதியில் நிற்கவில்லை. இது இப்படித்தான் இருக்கும் காசியை மாற்ற முடியாது என்ற எண்ணம் இருந்தது. மோடியை போல் பலர் வருவார்கள், ஆனால் எதையும் மாற்ற முடியாது என்று எண்ணினர். பல மதத்தை சேர்ந்தவர்கள் காசிக்கு வந்து செல்கின்றனர். காசி இப்போது மீண்டும்
புதிய ஒளி பெற்றுள்ளது என்றார்.
முன்னதாக 'ஹர ஹர மகாதேவ்' என்ற கோஷத்துடன் தனது உரையைத் தொடங்கினார்.
Related Tags :
Next Story