வாரணாசியில் கட்டுமான தொழிலாளர்களுடன் மதிய உணவு அருந்திய பிரதமர் மோடி..!
வாரணாசியில் ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வாரணாசி,
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார்.
வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுடன் சேர்ந்து மதிய உணவை பிரதமர் அருந்தினார்.
Related Tags :
Next Story