விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி; லகிம்பூர் கேரி சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்கு குழு தகவல்
உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம், விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி என சிறப்பு விசாரணைக்குக் குழு தெரிவித்துள்ளது
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம், விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி என சிறப்பு விசாரணைக்குக் குழு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை முயற்சி உள்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு விசாரணைக்கு குழு தெரிவித்துள்ளது. மேலும், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வழக்கை விசாரிக்கும் போலீசார், நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
லகிம்பூர் கேரி சம்பவத்தின் விவரம்;
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய மந்திரி மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து உத்தர பிரதேச அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளையும் விசாரணைக்குழுவில் இணைக்க உத்தரவிட்டது.
Related Tags :
Next Story