ராணுவத்துக்கு ஒத்துழைப்பு கிடையாது : நாகலாந்து பழங்குடியின அமைப்பு அறிவிப்பு


ராணுவத்துக்கு  ஒத்துழைப்பு  கிடையாது : நாகலாந்து பழங்குடியின அமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 3:09 PM IST (Updated: 14 Dec 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து எல்லைப்பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளில் அமலில் உள்ள ஆயுதப்படைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கோஹிமா,

நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு  இருந்த ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவினர், தவறுதலாக அப்பாவி பொதுமக்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியது. அப்பாவி பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலுக்குப் பிறகு நாகலாந்தில் ஆயுதப்படைக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

இந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, ராணுவத்துக்கு ஒத்துழைப்பு கிடையாது என்று அங்குள்ள கொன்யாக் நாகா பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கொன்யாக் கிராம சபைகள்/மாணவர்கள் அல்லது எந்தவொரு சமூகமும் எந்த விதமான வளர்ச்சி தொகுப்பு திட்டங்கள் /உதவிகளை ஏற்கக்கூடாது. ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்களையும் நடத்தக்கூடாது எனவும் கொன்யாக் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது. 


Next Story