கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Dec 2021 7:29 PM IST (Updated: 14 Dec 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 4,073- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 35,410- ஆக குறைந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 21 ஆயிரத்து 001- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில்  64,350- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

மாவட்ட வாரியாக அதிகபட்சமாக  எர்ணாகுளம் மாவட்டத்தில் 580, திருவனந்தபுரம்-566,  கோட்டயம் மாவட்டத்தில் 383- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 


Next Story