கொரோனாவுக்கு எதிராக 6 மாதங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி - சீரம் நிறுவனம் தகவல்

கொரோனாவுக்கு எதிராக 6 மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை வெளியிடுவோம் என்று சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பிரபல தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான புனே சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது அவர், “குழந்தைகளிடம் கொரோனா வைரசின் தீவிர பாதிப்பை நாங்கள் பார்க்கவில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு பீதி இல்லை. இருப்பினும் இன்னும் 6 மாதங்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியை வெளியிடுவோம்” என கூறினார்.
“உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்றுதான் கருதுகிறேன். அதில் கெடுதி எதுவும் இல்லை. இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்று விரும்பினால், அரசின் அறிவிப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பைத்தரும் என்பதற்கு போதுமான தரவுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story