ஆந்திராவின் மேற்கு கோதாவரி ஆற்றில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி


ஆந்திராவின் மேற்கு கோதாவரி ஆற்றில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி
x
தினத்தந்தி 15 Dec 2021 2:18 PM IST (Updated: 15 Dec 2021 4:03 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவின் மேற்கு கோதாவரி ஆற்றில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

மேற்கு கோதாவரி,

ஆந்திரா மாநிலம்  மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அஸ்வராப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி  30 பயணிகளுடன் மாநில அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. ஜங்காரெட்டிகுடம் மண்டலத்தில் உள்ள ஜில்லருவாகு என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த  போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் . இதில் 21 பேர் மீட்கபட்டனர். 9 பர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story