மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலகுவார்: ராகுல் காந்தி


மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலகுவார்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 15 Dec 2021 3:55 PM IST (Updated: 15 Dec 2021 3:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு உடனடியாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரப் பிரதேசத்தில் லகிம்பூர் கேரியில்  4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி. அது கவனக்குறைவால் நடந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் முயன்றனர். ஆனால், மக்களவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக  இன்று  பேட்டியளித்த ராகுல் காந்தி, ' லகிம்பூர்  கலவர விவகாரத்தை எழுப்பினோம். 

ஆனால், விவாதிக்க அனுமதியில்லை. பிரச்சினையை விவாதிக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்தோம். இந்த விவகாரத்தை நிச்சயம் நாடாளுமன்றத்தில் நாளை எழுப்புவோம், ஆனால், அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

மத்திய அரசு உடனடியாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நீதி வழங்க வேண்டும்.  நாங்கள் எந்த அளவு அழுத்தம் கொடுக்கிறமோ அதை பொறுத்துதான் அரசாங்கள் நடவடிக்கை மேற்கொள்கிறது. 

அமைச்சராக இருக்கும் இந்த குற்றவாளி...ராஜினாமா செய்வதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்.  வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என நாங்கள் கூறினோம். அனைவரும் அழுத்தம் கொடுத்ததையடுத்து வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டது” என்றார். 

Next Story