புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை,
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24-ம் தேதி இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிச.24 மற்றும் 25ஆம் தேதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் டிசம்பர் 31-ம் ஜனவரி 1,2-ம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும். டிசம்பர் 30, 31, ஜனவரி 1,-ம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையிடம் அனுமதி பெற்று புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் நேரம் மதுக்கடைகளை திறக்கலாம்.
Related Tags :
Next Story