ஒமைக்ரான் அச்சுறுத்தல்: மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் டிச.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
இதன்படி அடுத்த 14 நாட்களுக்கு நகரில் பேரணி, பொது கூட்டம், போராட்டம் எதையும் நடத்த முடியாது.
மும்பை,
உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது அந்த வைரஸ் உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கட்டுபாடுகளையும் மீறி இந்தியாவிற்குள் அந்த வைரஸ் நுழைந்து உள்ளது.
தற்போது நாட்டில் ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் இதுவரை அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த 14 நாட்களுக்கு நகரில் பேரணி, பொது கூட்டம், போராட்டம் எதையும் நடத்த முடியாது. இதேபோல பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது.
Related Tags :
Next Story