கள்ளக்காதலியின் கணவரை பார்த்து பயந்து 5 வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் பலி


கள்ளக்காதலியின் கணவரை பார்த்து பயந்து 5 வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Dec 2021 6:28 AM GMT (Updated: 2021-12-16T11:58:46+05:30)

கள்ளக்காதலியின் கணவரை பார்த்து பயந்து 5 வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜெய்ப்பூர்

உத்தரபிரதேசம்  மாநிலம் நைனிடாலை சேர்ந்தவர் மோசின் (வயது 29)  அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் தனது சிறுவயது மகளை  அழைத்து கொண்டு வாலிபர் மோசினுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் தலைமறைவாகி விட்டார்.

அந்த பெண்ணின் மைனர் மகளுடன் மோசின்  ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் திருமணமான பெண்ணின் கணவர்  மனைவியையும் மகளையும் தேடி வந்தார். அவர்கள் ஜெய்ப்பூரில் இருப்பதை அறிந்து அவர்களை சந்திக்க அங்கு வந்து உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண்ணின் கணவர் மோசினுடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அவரை பார்த்ததும் பீதியடைந்த மோசின் வீட்டின் பால்கனியில் இருந்து குதித்தார். இதானல் படுகாயம் அடைந்த அவரை அந்தப் பெண்  எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை மோசின் உயிரிழந்தார்.

இந்த நிலையில்  தாயும் மகளும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story