போர் விமான பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் மாபெரும் ஒப்பந்தம்..!


போர் விமான பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் மாபெரும் ஒப்பந்தம்..!
x
தினத்தந்தி 16 Dec 2021 12:02 PM IST (Updated: 16 Dec 2021 12:02 PM IST)
t-max-icont-min-icon

‘ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின்’ முயற்சியாக உள்நாட்டிலேயே போர் விமானத்துக்கான பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பெங்களூரு,

‘பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட்(பெல்)’  நிறுவனத்துடன்  ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட்’ புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி,  ‘எல்சிஏ தேஜாஸ் எம்கே 1ஏ’  திட்டத்துக்காக 20 விதமான பாகங்களை பெல் நிறுவனம் வடிவமைத்து கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின்’ முயற்சியாக இந்த உள்நாட்டிலேயே  போர் விமானத்துக்கான பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்மூலம், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை உள்நாட்டுமயமாக்கும் முயற்சி சாத்தியமாக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய நிறுவனம் ஒன்றின் மீது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.

5 வருட ஒப்பந்தமாக இது கையெழுத்தாகி உள்ளது. 2023-2028 வரையிலான காலகட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதற்காக ரூ.2,400 கோடி தொகை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின்படி விமான இயக்கத்திற்கான கணிணிகள் உள்பட முக்கிய பாகங்களை தயாரிக்கும் பணிகள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு இந்திய விமானப்படை, உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்துக்கு தேவைப்பட்ட ‘ஹாம்மர்’ ஏவுகணைகளை வாங்க பிரெஞ்சு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

Next Story