ஆதார் அட்டைகளால் அரசுக்கு ரூ.2.25 லட்சம் கோடி சேமிப்பு...
நாட்டில் 131 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது. இந்த நிலையில், அரசால் அமைக்கப்பட்ட ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சவுரப் கார்க் கூறும்போது, இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டைகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை நாட்டில் மொத்தம் 131 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த அட்டைகளால் பெரிய அளவிலான பலன்கள் கிடைத்துள்ளன. நேரடி பலன் பரிமாற்றங்கள், உரிய பயனாளர்களுக்கு சென்றடைந்த நிலையில், ரூ.2.25 லட்சம் கோடியை அரசு சேமித்து உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story