குஜராத்தில் பிரபல தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி


குஜராத்தில் பிரபல தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Dec 2021 5:32 PM IST (Updated: 16 Dec 2021 5:32 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் பிரபல தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம், பஞ்ச்மஹால்ஸ், ரஞ்சித் நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் காலை  திடீரென மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டிடம் முழுவதும் தீ பரவியதை அடுத்து, தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பணியாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story