10.5% வன்னியர் இட ஒதுக்கீடு - தொடரும் தடை
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து தொடரும் என்றும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் பிப்ரவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 10.5% இட ஒதுக்கீட்டின்கீழ் ஏற்கெனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story