எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு..!
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
கார்பன் மாசை குறைக்கும் வகையில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் எஞ்சினுக்கு வழங்கப்படும் ஆற்றல் அதிகரிப்பதுடன், எரிபொருளின் தேவையும் குறையும் என்பதால் தற்போது 8.5 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எத்தனால் கலந்த பெட்ரோலை 2025-ம் ஆண்டுக்குள் 35 சதவீதம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ராமேஸ்வர் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், எத்தனால் கலவையை ஊக்குவிக்கும் வகையில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி)18 சதவீதத்தில் 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story